வெளிநாடு வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்புகள்! அமைச்சரின் கவனத்திற்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கடிதம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தனி அமைச்சகம் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எதிரொலித்து வந்தது.

கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.

தற்போது புதிதாக அமைந்திருக்கும் திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிப்படி இதற்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி ஜனாப்.செஞ்சி. மஸ்தான் அவர்களை அமைச்சராகவும் நியமித்திருக்கிறது.

அவரிடம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மஜக வின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை(M KP) சார்பில் பரிந்துரைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அலைபேசியில் எடுத்துரைத்தார்.MKP வளைகுடா, தென்கிழக்காசியா, ஐரோப்பா, ஆஸ்திரெலியா போன்ற பல நாடுகளில் இயங்கி வரும் நிலையில் அதன் கீழ்கண்ட பரிந்துரைகள் கடிதம் மூலம் இன்று அனுப்பட்டுள்ளது.அவை,,,

▪வெளிநாடுகளில் மரணம் அடைந்த தமிழக தொழிலாளர்களை அரசு செலவில் தாயகத்திற்கு எடுத்து வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

▪அன்னிய வருவாயை நாட்டுக்கு ஈட்டுத் தந்த அவர்கள்,வயது மூப்பு அல்லது பணிஓய்வு காரணமாக நாடு திரும்பும்போது அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

▪வேலை இழப்பு காரணமாக தாயகம் திரும்புபவர்களுக்கு இடைக்கால உதவித்தொகை வழங்க வேண்டும்.

▪வெளிநாடுகளில் தமிழர் நலன் சார்ந்து செயல்படும் அமைப்புகளை அங்கீகரிக்க வேண்டும்.

▪போலி விசா / போலி வேலை வாய்ப்பு என ஏமாற்றும் ஏஜெண்டுகளின் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

▪வெளிநாடுகளில் பணிபுரிந்து விபத்து அல்லது பெரு நோய் காரணமாக தாயகம் திரும்புபவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இங்கு உயர் சிகிச்சை அளிக்க வகை செய்ய வேண்டும்.

▪வெளிநாடுகளுக்கு செல்ல பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியான இலவச பயிற்சி அளிக்க வேண்டும்

▪வேலைக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயித்திடும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும்

▪தாயகம் திரும்பி தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சுய தொழில் தொடங்க மானியமும், கடனும் வழங்க வழி செய்ய வேண்டும்

▪வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் தமிழக தொழிலாளர்களுக்கு என குறை தீர்ப்பு பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

▪ வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு அவர்களது ஆற்றலை மதிப்பிடும் சிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகள் அக்கடிதத்தில் முதன்மைப்படுத்தப் பட்டுள்ளது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
07.07.2021