தூத்துக்குடி.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டிணம் நகர ஆலோசனை கூட்டம் கடந்த 30.07.2017 மாலை 5 மணியளவில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகர நிர்வாகிகள் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி அவர்கள் கலந்து கொண்டு புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். தீர்மானங்கள்.. #எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றி இரத்ததானம் செய்வது. வரும் 19 ம் தேதி மாவட்டத்திற்கு வருகை தரும் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களை வைத்து நகர, கிளைகள் சார்பாக கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING தூத்துக்குடி (தெற்கு) 30.07.2017
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
தோப்புத்துறை ஹம்தான் திருமணத்தில் மஜக தலைவர்கள் ஒன்று கூடல்…
வேதாரண்யம்.ஜூலை.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் பணியாற்றிவரும் மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ்வின் தம்பி பொறியாளர் ஹம்தான் அவர்களின் திருமணம் நேற்று (30.07.2017) தோப்புத்துறையில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க மஜக தலைவர்கள் தோப்புத்துறைக்கு வருகை தந்தனர். இந்த திருமண நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினர். இதில் மஜக பொருளாளர் SS.ஹாரூண் ரசீது , தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் , இணை பொதுச் செயலாளர் மைதீன் உலவி , துணை பொதுச் செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர் ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், தைமிய்யா, ராசுதீன், மாநில துணைச் செயலாளர்கள் திண்டுக்கல் அன்சாரி, புதுமடம் அனீஸ், சமீம் அகமது , மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ் , தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் வானவில் காதர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் கலந்து
அரசினர் உயர்நிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த தீவிர முயர்ச்சி செய்த மஜக மாநில பொருளாளர்க்கு நன்றி…
சென்னை.ஜூலை.28., மவுண்ட்ரோடு, தாயார் சாகிப்தெருவில் உள்ள அரசினர் முஸ்லிம் உயர்நிலை பள்ளியை +1,+2 மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கும், பள்ளி கல்வித்துரை அமைச்சர்.மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கும், பள்ளியை மேல்நிலைபள்ளியாக்க தீவிர முயற்ச்சி செய்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்களுக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுடப அணி, சென்னை. #MJK_IT_WING 28.07.2017
முன்னாள் MLA அஸ்லம் பாஷாவை மஜக தலைவர்கள் உடல் நலம் விசாரிப்பு…!
சென்னை.ஜூலை.26., மமக அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா Ex.MLA அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொருளாளர் S.S. ஹாரூன் ரஷீது, மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாகிர் ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். நலம் பெற பிரார்த்தித்து விடை பெற்றார்கள். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING தலைமையகம். 26.07.2017
மஜக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாக கூட்டம்! மாநில பொருளாளர் பங்கேற்பு!
இராமநாதபுரம்.ஜூலை.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் ஆலோசனை கூட்டம் மற்றும் பரமக்குடி நகரம் எமனேஸ்வரம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (17.07.2017) நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பரமக்குடி நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி அவர்களின் திருமணத்திற்கு பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, தலைமை ஒருங்கினைப்பாளர். மௌளா M.நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதின் உலவி ஆகியோரை நேரில் சென்று அழைப்பிதல் கொடுப்பது என்றும், 2. எதிர்வரும் 06/08/17 அன்று பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது என்றும், 3. 06/08/17 அன்று மாலை மாநில நிர்வாகிகளை அழைத்து கருத்தரங்கம் நடத்துவது என்றும், 4. மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்த்து புதிய கிளைகளை உருவாக்குவது... ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், அப்துல் கஃபூர், பைசல்ரசீத், அப்துல்நசீர், பரமகுடிநகர செயலாளர். ஷாகுல், துணை செயலாளர் ஜாஃபர்அலி, கலிஃபதுல்லாஹ், ஷமிர், ரஹ்மான், மாணவர் இந்தியா செயலாளர்