தூத்துக்குடி.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டிணம் நகர ஆலோசனை கூட்டம் கடந்த 30.07.2017 மாலை 5 மணியளவில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நகர நிர்வாகிகள் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.
ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி அவர்கள் கலந்து கொண்டு புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
தீர்மானங்கள்..
#எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றி இரத்ததானம் செய்வது.
வரும் 19 ம் தேதி மாவட்டத்திற்கு வருகை தரும் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களை வைத்து நகர, கிளைகள் சார்பாக கட்சியின்
கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
தூத்துக்குடி (தெற்கு)
30.07.2017