வேதாரண்யம்.ஜூலை.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் பணியாற்றிவரும் மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ்வின் தம்பி பொறியாளர் ஹம்தான் அவர்களின் திருமணம் நேற்று (30.07.2017) தோப்புத்துறையில் நடந்தது.
திருமணத்தில் பங்கேற்க மஜக தலைவர்கள் தோப்புத்துறைக்கு வருகை தந்தனர்.
இந்த திருமண நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினர்.
இதில் மஜக பொருளாளர் SS.ஹாரூண் ரசீது , தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் , இணை பொதுச் செயலாளர் மைதீன் உலவி , துணை பொதுச் செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர் ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், தைமிய்யா, ராசுதீன், மாநில துணைச் செயலாளர்கள் திண்டுக்கல் அன்சாரி, புதுமடம் அனீஸ், சமீம் அகமது , மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ் , தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் வானவில் காதர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில் நுட்ப அணி
#MJK_IT_WING
வேதை நகரம்,
நாகை தெற்கு மாவட்டம்.
31.07.2017