மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA மதுரை வருகை..!

மதுரை.மே.30., மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் கமால் அவர்கள் கடந்த வாரம் மரணமடைந்ததையொட்டி அவரது இல்லத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அம்சரி MLA அவர்கள் வருகை தந்தார்கள்.

அவரது இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி, தங்கள் குடும்பத்திற்கு மஜக எப்போதும் அரணாக இருக்குமென்று நம்பிக்கையூட்டினார்.

மகபூப்பாலையத்திற்கு வருகை தந்ததையொட்டி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், இளைஞர்களும் பொதுச்செயலாளரை சந்தித்து அலவளவினர்.

இதில் மாநில துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மெய்தீன், வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா மற்றும் இரண்டு மாவட்ட நிர்வாகிகள், மனிதநேய சொந்தங்கள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_தெற்கு_மாவட்டம்.
30.05.2018