மன்னார்குடி.ஏப்.29., விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அய்யா பி.ஆர் பாண்டியன் அவர்களை கடந்த 229.04.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். சில தினங்களுக்கு முன் நடந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டிய காவல்துறையின் அடாவடி போக்குகள் குறித்தும் விசாரித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும், ஐக்கிய அரபு அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்களும், மத்திய சென்னை மூஸா அவர்களும் உடன் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் 29-04-2017
மஜக விவசாய அணி
ஆளுநர் சந்திப்பில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்பு…
சென்னை.ஏப்.18., தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தில் மேதகு ஆளுநர் வித்யாசாகர்ராவ் மூலமாக பிரதமர் மோடியை வலியுறுத்தி தீர்மானங்களை அனுப்பி வைப்பது என முடிவெடுக்கபட்டது. அதன்படி இன்று சந்திப்பதற்கு ஆளுநர் மாளிகை அனுமதி வழங்கியிருந்தது, அதனை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் ஆளுநரை சந்தித்து இன்று (18.04.2017) காலை 11 மணியளவில் கோரிக்கை மனுவினை ஆளுநரிடம் அளித்தனர். தமிழக ஆளுநர் வித்யசாகர் ராவை விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.Com, காங்கிரஸ் கட்சி சார்பில் பவன்குமார், தமாகா சார்பில் கோவை தங்கம், விடியல் சேகர், விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவராஜசேகரன், ஜல்லிக்கட்டு மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் வேலு, காயத்திரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 17 பிரதிநிதிகள் சந்தித்து விவசாயிகளுக்கான கோரிக்கை மனுவை அளித்தார்கள். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை 18-04-2017
எழுச்சியுடன் நடைபெற்ற மஜக தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை. ஏப்.16., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (16.04.17) மாலை 7.00 மணியளவில் குடந்தை அனஸ் ரெஸ்டாரெண்ட்டில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் நீதி போதனையாற்றினார். தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் மத்திய மோடி அரசை கண்டித்து எதிர்வரும் 19.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு குடந்தையில் ரயில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மஜக விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் தமிழக விவசாயிகள் படும் துன்பங்கள் குறித்து கூறினார்கள். மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் ரயில் முற்றுகை போராட்டத்தை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள் அதனை தொடர்ந்து ஏப்ரல்.30 அன்று சோழபுரம் பொதுக்கூட்டம் அழைப்பு பணிகள் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது யாசின் அவர்கள் நன்றி உரையாற்றினார். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு 16.04.2017.
தஞ்சையில் அனைத்து கட்சியின் ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில விவசாய அணி செயலாளர் பங்கேற்பு..!!
தஞ்சை.ஏப்.11., காவேரி நதிநீர் உரிமையை மீட்க, விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், மாணவர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டார்கள். உடன் மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை மாவட்டம். 11.04.2017
தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு .!
தஞ்சை.ஏப்.10., தஞ்சாவூரில் தொடர்ந்து 14 நாட்களாக தோழர் மணியரசு தலைமையில் காவிரி மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் உமா பாரதி கொண்டு வந்திருக்கும் ஒற்றை தீர்ப்பாய சட்டத்தை எதிர்த்தும் நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகள் எழுச்சியோடு பங்கேற்று வருகிறார்கள் . இன்று மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை ஆதரித்து எழுச்சியுரையாற்றினார் . அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . கடந்த இரண்டு வாரங்களாக இப்போராட்டத்தில் தஞ்சை நகர மஜகவினர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது . தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம். 10.04.2017