பி.ஆர்.பாண்டியன் அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!

image

மன்னார்குடி.ஏப்.29., விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அய்யா பி.ஆர் பாண்டியன் அவர்களை கடந்த 229.04.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.

சில தினங்களுக்கு முன் நடந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டிய காவல்துறையின் அடாவடி போக்குகள் குறித்தும் விசாரித்தார்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும், ஐக்கிய அரபு அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்களும், மத்திய சென்னை மூஸா அவர்களும் உடன் இருந்தனர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
திருவாரூர் மாவட்டம்
29-04-2017