1886 ல் சிக்காகோ நகரத்தில் மே மாதம் 4 ம் நாள் இனி எட்டு மணி நேர வேலை தான் செய்வோம் என தொழிலாளர்கள் எழுப்பிய உரிமை முழக்கம் அவர்களின் உயிர்களை பறிப்பதற்கு காரணமாக அமைந்தது.
மனிதகுலம் செழித்து தழைப்பதற்கும், உயிரோட்டமாக இயங்குவதற்கும் உழைப்பாளிகளின் வியர்வையே மூலக்காரணம் என்று சொன்னால் மிகையாகாது.
உண்ணும் உணவு தொடங்கி உடுத்தும் உடை வரை, வாழ்வு தொடங்கி மரணம் வரை மனிதகுலத்தின் அனைத்து தேவைகளுக்கும் உழைப்பாளிகளின் தயவே தேவைப்படுகிறது.
உழைப்பின் வலிமை உணர்ந்து இனி தொழிலாளர்களை நசுக்காதீர்கள் என கூக்குரலிட்டு வைக்கோல் சந்தை கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஜார்ஜ், ஆல்பர்ட், அடால் ஃபிசர் மற்றும் ஆகஸ்ட் ஸ்பைஸ் உள்ளிட்ட நான்கு பெரும் தூக்கிலப்படுவதற்கு முன்பு கூறிய வார்த்தைகள் உழைப்பாளிகளின் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
எங்கள் உயிர் பறிப்பது குறித்து எழும் அடக்குமுறை ஒலியை விட எங்கள் மரணத்தின் நிசப்தம் எதிர்காலத்தில் மிக வலிமையானதாக இருக்கும் என்றார்கள்.
இன்றைக்கு மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உழைப்பவன் வியர்வை உலரும் முன் கூலியை கொடுத்துவிடுங்கள் என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்.
இவண்
எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது.
மாநில பொருளாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
01.05.2017