You are here

E.G.S கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக M.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்பு!

image

image

image

நாகை. ஏப்.30., நாகப்பட்டினம் E.G.S பிள்ளை கலை, அறிவியல் கல்லூரியின் 2016-2017 க்கான பட்டமளிப்பு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த 30-04-2017 அன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான M.தமிமுன் அன்சாரி MA.,MLA., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கல்லுரியின் சேர்மன் ஜோதிமணி ஜி.எஸ்.பிள்ளை, செயலாளர்  ஸ்ரீ.பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் டாக்டர் நட்ராஜ் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கெடுத்தனர்.

கல்லூரி நிர்வாகமும், பேராசிரயர்களும், மாணவ மாணவிகளும் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருந்ததால் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்து சிறப்பித்துதந்தது அணைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
நாகை மாவட்டம்
30.04.2017

Top