மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மனைகள் வழங்ககோரிய முற்றுகை போராட்டம்..! மஜகவினருடன் கோட்டாட்சியர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் தீர்வு!!

மனிதநேய ஜனநாயக கட்சியின், சிவகங்கை மாவட்டம் சார்பாக இன்று (07.09.2021) நடைபெறுவதாக இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கைவிடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பேரூராட்சி பகுதியிலும், ஊராட்சி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊராட்சி பகுதியிலும் இடங்கள் கண்டறிந்து இலவச மனைகள் வழங்கிட வேண்டும் எனவும்,

மாற்றுத்திறனாளியின் பெற்றோர் வழி சொத்து கிடைக்கிறதோ, இல்லையோ. மாற்றுத்திறனாளி என்ற ஒற்றை காரணத்திற்காக இதையே தகுதியாக ஏற்று மனு செய்த, அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச மனைகள் வழங்க வேண்டும்,

பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள முறைகேடுகளை களையவும் அவர்களுக்கு ‌‌சிரமம் கொடுக்காமல் அவர்களின் வீடுகளுக்கு சென்று சரியான முறையில் ஆய்வு நடத்திட வேண்டும்.

உள்ளிட்ட மேற்கண்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், நேற்று (06-09-2021) மாலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியர், கிராம அலுவலர், காவல் சார்பு ஆய்வாளர் மற்றும்
மஜக மாநில துணைச்செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ், மாவட்ட செயலாளர் காஜா மைதீன், மற்றும் அல்லாஹ் பிச்சை, கான்ஷா உஸ்மான், துல்கர்ணை (நெய்னா), முஸ்தபா, அபூபக்கர் (அம்பலம்), முருகன், அய்யூப், அப்துல் ரஹ்மான், நஸ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமாதான கூட்டத்தில் கீழ்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

மறுஆய்வு செய்து பயனாளிகளை மீண்டும் தேர்ந்தெடுப்பது என்றும்.

பேரூராட்சி பகுதியில் மீதமுள்ள வீடற்ற மாற்றுதிறனாளிகளை கண்டறிந்து அரசின் ஒப்புதல் பெற்று விலையில்லா மனைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சிவகங்கை_மாவட்டம்
06.09.2021