சென்னை.ஏப்.07., இன்று R.K நகர் தொகுதியில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் T.T.V.தினகரன் அவர்களை ஆதரித்து #மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்து குழுக்களாக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மதியம் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சரி MLA, பொருளாளர் SS.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.M.நாசர், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் பள்ளிவாசல்களில் ஜூம்மா தொழுகையின் போது தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்தனர். இன்று மாலை காசிமேடு மீனவர் பகுதிகளில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வாக்காளர்களை சந்தித்தார். பிறகு அமைச்சர் O.S.மணியன் அவர்களை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார். மாலை 5 மணியளவில் அங்குள்ள ஜமாத்தார்களை சந்தித்து #தொப்பி சின்னத்திற்க்கு ஆதரவுகோரினார். பிறகு நேதாஜி நகருக்கு வருகை தந்து ஜமாத்தார்களை சந்தித்து ஆதரவு கோரினார். பிறகு மஜக தொண்டர்களுடன் கடைதெருவில் சென்று வணிகர்களிடம் #தொப்பி சின்னத்திற்க்கு ஆதரவு கோரினார். அதன்பிறகு நேதாஜி நகரில் அமைச்சர் செல்லூர் ராஜ் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் திரு.T.T.V. தினகரனை ஆதரித்து
மஜக விவசாய அணி
R.K.நகர் பள்ளிவாசலில் TTV.தினகரனுடன் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பு! தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்பு!
சென்னை.ஏப்.07., R.K நகரில் இன்று செரியன் நகர் மஸ்ஜித் ஜதீத் பள்ளியில் அதிமுக (அம்மா) வேட்பாளர் TTV.தினகரன் அவர்கள் தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வாக்கு சேகரித்தார். அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாலார் அன்வர் ராஜா M.P, SDPi தலைவர் தேஹ்லான் பாகவி, மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.M.நாசர், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா.ரஹிம், முன்னாள் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவுது உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். பிறகு ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்தனர். அதன் பிறகு வேட்பாளர் TTV. தினகரன் அவர்களும், மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதிமுக அனைத்து சமுதாய மக்களுக்கான கட்சி என்றும், அதனால் எல்லோரும் தன்னை ஆதரிப்பதாகவும் TTV. தினகரன் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கூறியதாவது... TTV. தினகரன் வெல்லப் போவது உறுதி. இன்று பள்ளிவாசலில் தொழுதுவிட்டு நாங்கள் வாக்கு சேகரித்தப் போது மக்கள்
R.K.நகர் தொகுதியில் திரு.TTV. தினகரனுடன் மஜக பொது செயலாளர் வாக்குசேகரிப்பு…
சென்னை.ஏப்.07.,நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 40 வது வட்டம் வா. ஊ.சி நகர் பகுதியில் இன்று அஇஅதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் திரு.TTV.தினகரனுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டார். இப்பிரச்சாரத்தில் மஜக மாநில இளைஞரணி செயலாளர் ஷமீம் அகமது, மாநில மீனவரணி செயலாளர் பார்த்தீபன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அசீம் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நூட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING R.K.நகர் தொகுதி. 06.04.2016
வழக்கறிஞர்களின் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு..!
சென்னை.ஏப்.06., 24 நாட்களாக தமிழக விவசாயிகள் விவசாயியையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்காக இந்திய தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை ஆதரித்தும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி உயர்நீதி மன்ற வாசலில் உண்ணா நிலை போராட்டம் நடைப்பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் சா.ரஜினிகாந்த் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் CPI (M) ராமகிருஷ்ணன், CPI முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், காங்கிரஸ் திருநாவுக்கரசு, நாம் தமிழர் சீமான், SDPI தெகலான் பாகவி, திராவிடர் விடுதலை கழகம் விடுதலை இராஜேந்திரன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் பி.ஆர்.பாண்டியன், மதிமுக சத்யா, மமக ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING சென்னை. 06.04.2017
விவசாய சங்கம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மஜக மாநில செயலாளர்…
தஞ்சை.ஏப்.03., இன்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருபுவனம் விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் ஏராளமான மஜகவினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம் 03.04.17