R.K. நகரில் மஜக தீவிர பிரச்சாரம்!

image

image

image

image

சென்னை.ஏப்.07., இன்று R.K நகர் தொகுதியில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் T.T.V.தினகரன் அவர்களை ஆதரித்து #மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐந்து குழுக்களாக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இன்று மதியம் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சரி MLA, பொருளாளர் SS.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.M.நாசர், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் பள்ளிவாசல்களில் ஜூம்மா தொழுகையின் போது தொண்டர்களுடன் சென்று  வாக்கு சேகரித்தனர்.

இன்று மாலை காசிமேடு மீனவர் பகுதிகளில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வாக்காளர்களை சந்தித்தார். பிறகு அமைச்சர் O.S.மணியன் அவர்களை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

மாலை 5 மணியளவில்
அங்குள்ள ஜமாத்தார்களை சந்தித்து #தொப்பி சின்னத்திற்க்கு ஆதரவுகோரினார்.

பிறகு நேதாஜி நகருக்கு வருகை தந்து ஜமாத்தார்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

பிறகு மஜக தொண்டர்களுடன் கடைதெருவில் சென்று வணிகர்களிடம் #தொப்பி சின்னத்திற்க்கு ஆதரவு கோரினார்.

அதன்பிறகு நேதாஜி நகரில் அமைச்சர் செல்லூர் ராஜ் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் திரு.T.T.V. தினகரனை ஆதரித்து பேசினார். பல நூற்றுக்கணக்கானோர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

நிறைவாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து உரையாடினார். மஜகவினரின் துல்லியமான தேர்தல் பணிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெகுவாக பாராட்டினார்.

மஜகவின் மாலை நேர களப்பணிகளில் மன்னை செல்லச்சாமி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, தமிழ் இளம் உலமாக்கள் கூட்டமைப்பின் செயலாளர் மௌலவி S. அப்துல் மன்னான் காசிமி, மாநில விவாசய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில மீனவரணி செயலாளர் பார்த்தீபன், வடசென்னை மாவட்ட செயலாளர் அஜீம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர், அன்பு, கனி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
R.K.நகர் தொகுதி தேர்தல் பணிக்குழு.
07.04.2017