கேரளா மாநிலத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய மஜக..! துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், வழங்கினார்..!! கண்ணீருடன் நன்றி தெரிவித்த கேரள மக்கள்..!!!

கோவை.செப்.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 15லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டன.

அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பொருட்களை நேரடியாக வழங்க மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் 40க்கும் மேற்பட்ட வெள்ள நிவாரண குழுவினர் புறப்பட்டு சென்றனர்.

அவர்களுக்கு கேரள மாநிலம் வய்யநாடு பகுதியில் உள்ள மானந்தாவடி கிறிஸ்த்துவ தேவாலயத்தில் தங்க இடமளித்தனர்.

பிறகு அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து கவுன்சிலர் ஜேக்கோசெபாஸ்டின், மற்றும் சமூக ஆர்வலர் ரபீக், அவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுத்து நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு இரு குழுக்களாக மஜக வினர் செயல்பட்டனர்.

பிறகு மீனங்காடி பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களுடன் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் தலைமையில் ஒரு நிவாரண குழுவினர் சென்றனர்.

அவர்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர் பிறகு மஜக நிர்வாகிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம் வெள்ளத்தால் எங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்து விட்டதாகவும் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாகவும் இதுவரை இப்பகுதியில் யாரும் வந்து உதவவில்லை எனவும் நீங்கள் தான் வந்துள்ளதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர் அவர்களுக்கு துணை பொதுச்செயலாளர் ஆறுதல் கூறினார்.

பிறகு அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள் மஜக வினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், மாவட்ட அணி நிர்வாகிகள் ABS.அப்பாஸ்,சம்சுதீன், அன்வர், TMK.காஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேட்டு, பகுதி நிர்வாகிகள் பூ.காஜா, பூ.அபு, அக்கீம், மற்றும் கிளை நிர்வாகிகள் அபு, ஹாருண், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#கோவை_மாவட்டம்.
04.09.18