சென்னை.ஏப்.07., R.K நகரில் இன்று செரியன் நகர் மஸ்ஜித் ஜதீத் பள்ளியில் அதிமுக (அம்மா) வேட்பாளர் TTV.தினகரன் அவர்கள் தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வாக்கு சேகரித்தார். அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாலார் அன்வர் ராஜா M.P, SDPi தலைவர் தேஹ்லான் பாகவி, மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.M.நாசர், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா.ரஹிம், முன்னாள் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவுது உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
பிறகு ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்தனர். அதன் பிறகு வேட்பாளர் TTV. தினகரன் அவர்களும், மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதிமுக அனைத்து சமுதாய மக்களுக்கான கட்சி என்றும், அதனால் எல்லோரும் தன்னை ஆதரிப்பதாகவும் TTV. தினகரன் கூறினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கூறியதாவது…
TTV. தினகரன் வெல்லப் போவது உறுதி. இன்று பள்ளிவாசலில் தொழுதுவிட்டு நாங்கள் வாக்கு சேகரித்தப் போது மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.
இத்தொகுதியில் உள்ள சிறுபான்மை மக்கள் தொப்பி சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.
டெல்லியில் இருக்கும் சில தீய சக்திகள் எங்கள் கூட்டணிக்கு எதிராக சதி செய்கிறார்கள். எங்கள் கூட்டணியை நேற்று ஆதரித்த சரத்குமார் அவர்களின் வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டுகிறார்கள். அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். இதெற்கெல்லாம் எங்கள் கூட்டணி பயப்படாது.
சவப்பெட்டியை வைத்து அரசியல் செய்வது நாகரீகமற்றது. மறைந்த முதல்வர் டாக்டர் அம்மா அவர்களின் கல்லறையை காயப்படுத்தாதீர்கள்.
மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகள் தொடர்ந்து அதிமுக (அம்மா) அணியின் வெற்றிக்காக பாடுப்படுவோம். இவ்வாறு மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA பேட்டியளித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பில் மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில இளைஞரணி செயலாளர் ஷாமிம் அகமது, மாநில விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக், மீனவர் அணி மாநில செயலாளர் பார்தீபன், வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம், செரியன் நகர் மஜக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் அக்பர் (திருவள்ளுர் மேற்கு), வட்ட செயலாளர் காஜா, அப்துல் சுதீர், A.S.கனி, அன்பு, கலிமுல்லா உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மஜக தொண்டர்களும் பங்கேற்றனர்.
தகவல்;தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
R.K.நகர் தேர்தல் பணிக்குழு
07.04.2017