இராமநாதபுரம்.மார்ச்.11., இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யபட்ட இராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சார்ந்த சகோதரர் Tk.பிரிட்ஜோ அவர்களின் இறப்பிற்கு ஆறுதல் கூருவதற்க்காக மஜக மாநிலபொருளாளர் எஸ்.எஸ். ஹாருன்ரசீத் M.com, அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வருகை புரிந்தார். சகோதரின் இழப்பிற்கு ஆறுதல் கூறி மத்தியஅரசுக்கும் இலங்கை அரசிற்கும் எதிராக மஜக சார்பில் அவர்களின் கண்டனத்தை பதிவு செய்தார்கள். பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுகருத்தை தெரிவித்தார்கள். உடன் மஜக இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் மற்றும் இளையான்குடி நகரம் நிர்வாகிகள் உட்பட100க்கும் அதிகமானோர் பங்கு கொண்டனர்... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி. மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING இராமநாதபுரம் மாவட்டம். 11.03.2017
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜகவின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயற்குழு கூட்டம்…
புதுகை.மார்ச்:11., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம்... தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா முன்னிலையிலும் நடைப்பெற்றது... மாவட்ட செயலாளர் துரைமுஹம்மது வரவேற்று பேசினார் இந்த கூட்டத்தில் தலைமையின் அறிவுறுத்தலின்படி நிர்வாக சீர்திருத்ததிற்க்காக அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்... இந்த கூட்டத்தில் மாநில தொழில் நுட்ப அணி செயலாளர் கோட்டை முஹம்மது ஹாரீஸ், மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் மாவட்ட பொருலாளர் ரஹீம் தாலிஃப், அறந்தை அஜ்மீர் அலி, அப்துல்ஹமீது, முபாரக்அலி, நகரச்செயலாளர் முஹம்மது குஞ்சாலி உட்பட மகஜ தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்... முடிவில் மாவட்ட பொருலாளர் ரஹீம்தாலிஃப் நன்றி கூறினார். #தகவல்_தொழில்_நுட்பஅணி #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WINK #புதுக்கோட்டை_மாவட்டம்
திண்டுக்கல்லில் மாணவர் இந்தியா விழிப்புணர்வு முகாம்…
திண்டுக்கல்லில் இன்று (12.03.17) மாணவர் இந்தியாவின் சார்பில் 'சமூக நலனில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்' நடைப்பெற்றது. இதில் பொது சேவை, பண்பாடு, தன்னம்பிக்கை, நேர்த்தியான செயல்பாடுகள், மாணவர் சமூகத்தின் வாழ்வியல், பெற்றோரின் கடமைகள், மன அழுத்தங்களை தாண்டி தேர்வில் வெற்றி பெறுதல், என பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்பாக வகுப்பெடுத்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆராவாரத்திற்கிடையே எழுச்சியுரையாற்றினார். இந்நிகழ்வில் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியை குருவாம்மாள், ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் பீர்பாஷா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் மு.ப. கணேசன், கூடைப்பந்தாட்ட கழகத் தலைவர் யூசுப் அன்சாரி மற்றும் வினோத் ராஜதுறை உள்ளிட்டோர் உரையாற்றினர். மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் இந்தியாவின் தலைமை நிர்வாகிகள் அஸாருதீன், ஜாவீத், பஷீர் அஹமது ஆகியோர் நிகழ்ச்சியை செம்மைப்படுத்தினர். மாணவர் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் முகம்மது பிர்தௌஸ், மரியமனோஜ், சதீஸ் குமார், முனாப்தீன், மோகன் காமாட்சி, உமர் முக்தார், ரபிக் உள்ளிட்டோர்
சர்வதேச விசாரனையை விரைவுபடுத்து கைய்யெழுத்து இயக்கம் மஜக பங்கேற்பு!
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தாமதிக்காமல் நடத்தப்பட வேண்டும் என முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு குழு சார்பில் கையெழுத்து இயக்கம் 11.3.2017 காலை சரியாக 9.00 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம், மாவட்ட பொருளாளர் தாஹா மற்றும் பூவிருந்தவல்லி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING வட சென்னை மாவட்டம்
பஹ்ரைன் மண்டல மாதாந்திர கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் 10:03:2017 மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் சகோதரர் நாச்சிகுளம் ஜான் முகம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மஜக வின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையும், மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி.MLA அவர்களின் சிங்கப்பூர் விழா குறித்தும் மண்டல துணை செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்குகொண்டனர். புதிய பாதை,புதிய பணத்தின் தொடக்கமாக இருக்கும் ம ஜ வின் செயல்பாட்டால் சென்னை, இராமநாதபுரம், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த எழுச்சிமிகு இளைஞர்கள் தங்களை ம ஜ க வில் இணைத்துக்கொண்டர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய கலாச்சாரப் பேரவை #MJK_IT_WING பஹ்ரைன் மண்டலம்