மனிதநேய கலாச்சார பேரவை துபாய் மாநகர நிர்வாக ஆலோசனை கூட்டம்!

டிச.28,
மனிதநேய கலாச்சார பேரவையின் துபாய் மாநகர நிர்வாகிகள் கூட்டம் MKP அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமையிலும், அமீரக கொள்கைப்பரப்பு செயலாளர் Y.அப்துல்ரஜாக் அவர்கள் முன்னிலையில் அமீரக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமீரக செயலாளர் ஒப்புதலின் பேரில் எதிர்வரும் 2020 வருடத்திற்கான துபாய் மாநகர நிர்வாகிகளாக,

துபாய் மாநகர செயலாளர்:
V.ஷபீக்குர் ரஹ்மான்

பொருளாளர்:
Y.பையாஜ் அஹமது

துணைச் செயலாளர்கள்:
A.சித்திக்,
ஹம்தான்,
K.M.அஸாருதின்,
Y.சலீம்,

செயற்குழு உறுப்பினர்கள் :
1.ஆசிக்
2.ரியாஹ் அஹமது
3.மர்ஜுக்
4.சையது இப்ராஹிம்.
5.அர்ஸாத் அஹமது
6.G.கோகுல்
7.ஜாசிம்

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்:
N.சபீர் அகமது

உள்ளிட்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வாகியுள்ளனர். அமீரக செயலாளர் பேசும் போது, துபாய் மாநகர செயலாளராக B.ரஹமத்துல்லா அவர்களின் கடந்த இரண்டாண்டு செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் படி இருந்ததாகவும், புதிய பணி நிமித்தமாக அபுதாபி செல்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன் புதிய நிர்வாகமும் அதைப் போல் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், அமீரக மற்றும் துபாய் மாநகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்:
#மனிதநேயகலாச்சாரபேரவை
#தகவல்தொழில்நுட்பஅணி
#MKP_IT_WING | #துபாய்_மாநகரம்.
27/12/2019