இந்துக்களையும் முஸ்லிம்களையும் இணைத்த மோடிக்கு நன்றி..! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு..!

சென்னை மண்ணடியில் JAQH அமைப்பின் சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது “மோடி மதத்தால் மக்களை பிரிக்க நினைத்தார். இப்போது அவர் கொண்டு வந்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், தலித்துகளும் இணைந்து போராடுகிறார்கள். எங்களை இணைத்த மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.

JAQH அமைப்பின் இம்முயற்சியை பாராட்டிய அவர், தற்போது மஸாயீல், சிந்தாந்த பேதங்களை முன்னிறுத்தாமல், சுன்னத், தவ்ஹீத், தப்லீக், என பேதம் பார்க்காமல் எல்லோரும் ஓரணியில் இணைவதை பாராட்டினார்.

மேலும் இது குறித்து தற்போது ஷியா ஜமாத்தோடும் தான் பேசி வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து தேவர், வன்னியர், நாடார், தலித், யாதவர் உள்ளிட்ட பிற சமூக தலைவர்களோடும் பேசி வருவதாகவும், இந்த நாட்டின் பன்முக கலாச்சாரம், பொது ஒற்றுமையை காக்க எல்லோரும் ஒன்று பட்டு போராடுவதே காலத்தின் விருப்பம் என்றும் கூறினார்.

இதில் JAQH அமைப்பின் பொதுச் செயலாளர் நூர் முகம்மது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#சென்னை
28-12-2019