கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்ட மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஜமாத்துகள், வணிக அமைப்புகள், சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பலதரப்பையும் சந்தித்தார் .
நேற்று சிங்காநல்லூர், துடியலூர் ஜமாத்துகளையும், மாவட்ட TNTJ நிர்வாகத்தையும் சந்தித்தார் தொடர்ந்து ஜமாத்-இ-இஸ்லாம் சார்பில் கோவையில் நடத்தப்பட்டு வரும் ஹிதாயா பெண்கள் இஸ்லாமிய கல்லூரிக்கு வருகை தந்தார்.
அவருக்கு வரவேற்பளித்த நிர்வாகிகள் கல்லூரியின் செயல்பாடுகளை விளக்கினார். ஒரு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு இனையாண தரத்துடன் அக்கல்லூரி செயல்பட்டு வருவதும் பெண்கள் மிகவும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதும் அக்கல்லூரியின் சிறப்புகளாக இருக்கிறது.
அங்கு பயின்று வரும் மாணவிகளோடு பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறிது நேரம் கலந்துரையாடினார். பிறகு அக்கல்லூரி வளாகத்தை பார்வையிட்டார். ஒரு பகுதியில் அனைத்து சமூக பெண்களுக்கும் தையல் பயிற்ச்சியும் வழங்கப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சான்றிதழும் வழங்கப்பட்டு வருவதையும் கல்லூரி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
தகவல்;
மஜக ஊடகப் பிரிவு