தம்மாம் மண்டல IKPயின் புதிய கிளை உதயம்…!

image

image

image

தம்மாம்.நவ.13., கடந்த வெள்ளிகிழமை 10/11/2017 அன்று தம்மாம், மீனா பகுதியில் உள்ள குளோப் மெரின் கம்பெனி கேம்பில் இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல செயலாளர் செய்யது அலி, பொருளாளர் ஹஜ் முஹம்மது, துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

இந்த கூட்டத்தில் அல் மீனா குளோப் மெரின் புதிய கிளை தொடங்க பட்டது. கிளை நிர்வாகிகள் கீழ் கண்டவாறு ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டார்கள்.

1) கிளை செயலாளர் :
Y.சாகுல் ஹமீது அவர்கள் (கோட்டைபட்டிணம்).

2) பொருளாளர் :
K. முஹம்மது மைதீன் அவர்கள் (தஞ்சாவூர்).

3) துணை செயலாளர்:
முஹம்மது நிஜாம் அவர்கள் (தென்காசி).

4) துணை செயலாளர் :
முஹம்மது ஹனீப் அவர்கள் (மேலப்பாளையம்).

5) துணை செயலாளர் :
K. தமிமுன் அன்சாரி அவர்கள் (மேலப்பாளையம்)

6) துணை செயலாளர் :
K. முஹம்மது சித்திக் அவர்கள் (தஞ்சாவூர்).

புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு மண்டல செயலாளர் மற்றும் மண்டல நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

நிகழ்வுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

#தகவல்;
#IKP_தம்மாம்_மண்டல_ஊடக_பிரிவு
#IKP_IT_WING
12/11/2017

Top