கோவை.நவ.13.,கோவை மாநகராட்சி 86வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து பாம்புகள் வருவதாகவும் ஒரு ஆண்டிற்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சில நாட்களுக்கு முன் சமூக வலை தளங்களில் செய்தி வந்தது.
அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் அந்த பகுதியை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று 86வது வார்டு செயலாளர் அரபாத் அவர்களின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், 77வார்டு செயலாளர் இப்ராஹிம், துணைசெயலாளர் அலி, இப்ராஹீம், 78 வது வார்டு நிர்வாகிகள் சுபேர், இத்ரீஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சாக்கடைகளை தூர்வாரி மேல் தளங்கள் அமைக்கக்கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்!
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
13.11.17