நாகை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் தமிமுன் அன்சாரி MLA!

image

image

image

(தொகுப்பு 1)

இன்று (13.11.17) நாகை தொகுதியில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பொதுமக்களிடம் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்தும், இதர குறைகள் குறித்தும் விசாரித்து அறிந்தார்.

நரிமணத்தில் வயலில் இறங்கி அங்கு வேலை செய்யும் விவசாய கூலி வேலை செய்யும் பெண்களிடம் அவர்களின் தேவைகளை விசாரித்தார்.

பயீர் காப்பீட்டுத் தொகையை விரைவில் பெற்று தருமாறும், விவசாய தொழிலாளர்களுக்கும் இழப்பீடுகள் கிடைக்க ஆவணம் செய்யுமாறும், மழை கால பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறும் வைத்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக MLA கூறினார்.

அதுபோல குத்தாலம் அருகே விவசாய பெண்களை சந்தித்து, அவர்களின் குடிநீர் தேவைகளை விரைந்து நிறைவேற்றி தருவதாகவும் கூறினார்.

அதுபோல எரவாஞ்சேரிக்கும் சென்று விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இச்சந்திப்பில் MLA அவர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன், நாகை முபாரக், திட்டசேரி செய்யது ரியாசுதீன், ஏனங்குடி யூசுப்தீன், பிஸ்மி யூசுப், திருநாவுக்கரசு, ஆறுமுகபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;

#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
13.11.17