You are here

புதிதாக தேர்வான IMA தலைவர்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் வாழ்த்து…!

இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) ஒன்றிய அரசால் அங்கீகரிக்ப்பட்ட அமைப்பாகும்.

இதன் தமிழ்நாடு தலைவராக சமீபத்தில் நடைப்பெற்ற தேர்தலில் டாக்டர் அபுல் ஹஸன், அவர்கள் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

35 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு அரசினால் மதிப்பு மிக்க ஒன்றாக கவனிக்கப்படுகிறது.

ஈரோட்டில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

மருத்துவ சேவை மட்டுமின்றி இயற்கை விவசாயம், கல்வி விழிப்புணர்வு,சமூக நல்லிணக்கம், சூழலியல் என இயங்கி வருவதற்கு கிடைத்த நல்ல அங்கீகாரம் இது என அவருக்கு பொதுச் செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.

இவர் திருவாரூர் மாவட்டத்தை பூர்வீகம் கொண்டவர். தற்போது ஈரோட்டில் மக்கள் செல்வாக்கு மிக்க மருத்துவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் ஷபீக் அலி, மாவட்டத் துணைச் செயலாளர் பக்கீர் முகம்மது, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திலிப் குமார், MJTS மாவட்ட செயலாளர் A. சபர் அலி, பகுதி செயலாளர்கள் ஹாரிஸ், ஜாவித் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
16.12.2021

Top