சென்னை.ஏப்.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்டம் திரு.வி.க. நகர் பகுதி 75-வது வட்டம் (ஓட்டேரி கிளை) சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட செயலாளர் S.A. அஸிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருமங்கலம் J. ஷமிம் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு மனிதநேய சொந்தங்களுக்கு கழகத்தின் சார்பாக மஜக கிரிக்கெட் அணி பனியன்களை வழங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்விற்கு மாவட்ட துணை செயலாளர் அன்வர் முன்னிலை வகித்தார், வட்ட செயலாளர் செல்வம் மற்றும் பொருளாளர் ரசாக் ஆகியோர் வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வடசென்னை. 17.4.2017.
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.3,80,000/- நிதி ஒதுக்கிய நாகை எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு!
நாகை. ஏப்.18., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடவும், பள்ளிக்கட்டிடங்களுக்கு டைல்ஸ் அமைத்திடவும் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்து எண்பதாயிரம் (3,80,000/-) நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி.MA., அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர், கிராமவாசிகள், மாணவர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நாகப்பட்டினம் 18.04.2017
எழுச்சியுடன் நடைபெற்ற மஜக தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை. ஏப்.16., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (16.04.17) மாலை 7.00 மணியளவில் குடந்தை அனஸ் ரெஸ்டாரெண்ட்டில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் நீதி போதனையாற்றினார். தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் மத்திய மோடி அரசை கண்டித்து எதிர்வரும் 19.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு குடந்தையில் ரயில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மஜக விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் தமிழக விவசாயிகள் படும் துன்பங்கள் குறித்து கூறினார்கள். மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் ரயில் முற்றுகை போராட்டத்தை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள் அதனை தொடர்ந்து ஏப்ரல்.30 அன்று சோழபுரம் பொதுக்கூட்டம் அழைப்பு பணிகள் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது யாசின் அவர்கள் நன்றி உரையாற்றினார். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு 16.04.2017.
டாஸ்மார்க் கடைய அகற்றக்கோரி மஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…
புதுகை.ஏப்.15., நேற்று 14/04/2017 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்போத்தி கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் அருகில் (25 மீட்டர் தூரத்தில்) சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்மார்க் கடையை அகற்ற கோரியும், இனி வரும் காலங்களில் பொன்பேத்தி கிராமத்திற்க்குல் டாஸ்மார்க் வைக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மஜக கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் A.முகம்மது ஹாரிஸ் ஆகியோருடன் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, சையது அபுதாஹீர், அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் அப்துல் ஜமின், நகர பொருளாளர் ஜகுபர் சாதிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பாஷித் கான், மேற்கு மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன்,
14வது நிதிக்குழு மானியபணிகள் நாகை MLA அதிகாரிகளுடன் கலந்தாய்வு…
நாகை. ஏப்.15., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் தாலுக்காவில் குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் குறித்து BDO மற்றும் ஊராட்சி செயலாளர்கள் , அதிகாரிகளுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார் . 14-வது நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கப்பட்ட 60 லட்சம் ரூபாய்க்கான 219 பணிகளில் 190 பணிகளை விரைந்து முடித்ததற்காக அதிகாரிகளை பாராட்டினார் . அதுபோல ஒருங்கிணைந்து ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியில் ஒதுக்கப்பட்ட 22 லட்சத்தில் 16 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது . மீதி 12 பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . இதுதவிர திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு 2 கோடியே 19 லட்சத்தில் 117 பணிகள் புதிதாக தேவைப்படுவதாகவும் , அதை கலெக்டரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் , வந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் , கலெக்டரிடம் பேசுவதாகவும் கூறினார் . தற்போது திருமருகலில் குடிநீர் பிரச்சனைகள் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு சீர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15-04-2017