புதுகை.ஏப்.15., நேற்று 14/04/2017 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்போத்தி கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் அருகில் (25 மீட்டர் தூரத்தில்) சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டிருந்தது.
அந்த டாஸ்மார்க் கடையை அகற்ற கோரியும், இனி வரும் காலங்களில் பொன்பேத்தி கிராமத்திற்க்குல் டாஸ்மார்க் வைக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் மஜக கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் A.முகம்மது ஹாரிஸ் ஆகியோருடன் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, சையது அபுதாஹீர், அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் அப்துல்
ஜமின், நகர பொருளாளர் ஜகுபர் சாதிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பாஷித் கான், மேற்கு மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன், புதுக்கோட்டை நகர செயலாளர் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தகவல் :-
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
14.04.2017