You are here

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு…!

image

image

சென்னை.ஜூலை.28.,  இன்று காலை சென்னையில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 11 பேர் கொண்ட குழுவை கடந்த வாரம் தமிழக அரசு நியமனம் செய்தது.

அதில் அமைச்சர் நிலோபர் கபில், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா , சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

இக்குழு இன்று சென்னை புதுக்கல்லூரியில் ஹஜ் கமிட்டியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கூடியது.

அதன் அடிப்படையில், கோவை ஐக்கிய ஜமாத்தின் பொதுச் செயலாளராக 13 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கோவை CTC அப்துல் ஜப்பார் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட C.T.C. அப்துல் ஜப்பார் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT WING
சென்னை.
28.07.2017

Top