தமிழக மக்களின் நலன் காக்கும் நோக்கில் கஞ்சா போதை கும்பலுக்கு எதிராக போராடி கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட அந்த தியாகி வாணியம்பாடி #வசீம்_அக்ரம் அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி, அவரது மனைவி பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் நன்மைகளுக்காக; சமூக தீமைகளுக்கு எதிராக போராடி உயிர் துறந்த அந்த தியாகிக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே இதயம் கனிந்து உங்கள் ஆறுதல் நிதியை கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வசீம் அக்ரம் மனைவியின் வங்கி கணக்கு விபரம். CANARA BANK Account No.8539101063476 Name: S.MOHSEENA TAZEEN IFSC CODE : CNRB0008539 வசீம் அக்ரம் அவர்கள் சகோதரர் அக்மல் : 8122780837 இவண், தலைமையகம், மனிதநேய ஜனநாயக கட்சி
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு.! மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்தனர்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்கு நேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வனப் பகுதியில் உள்ள இந்திய புகழ் பெற்ற முன்டந்துறை புலிகள் சரணாலயம் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் புலிகள் இனம் அழிந்து வருகின்றது, மேலும் உலகின் அரியவகை சிங்கவால் குரங்கு இனமும் அழிந்து வருவதையும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் நெல்லையில் அமைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்ற பட்டதால் அப் பல்கலைக்கழகத்தை அரிய வகை மூலிகைகள் அடங்கிய நாங்கு நேரி தொகுதிக் குட்பட்ட மலையடிவாரத்தில் அமைக்க வேண்டும், அப்போதுதான் அங்கு பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், அமையும் எனவும் மேலும் பல மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொலை நோக்கு பார்வையோடு தாங்கள் அளித்த இந்த கோரிக்கைகளை நிச்சயமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கையாக
வசீம் அக்ரம் குடும்பத்திற்கு நிதி உதவி… முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கடிதம்!
கஞ்சா வினியோக கூலிப்படையால் கொல்லப்பட்ட மஜக சகோதரர் வாணியம்பாடி வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியும், அவர் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஒரு அரசு வேலையும் தர வேண்டும் என வலியுறுத்தி மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக முதல்வருக்கு கடந்த செப்.11 அன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் முதல்வரின் தனி செயலாளர் திரு.உதயசந்திரன் IAS அவர்களின் அலுவலகத்தில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 13.09.2021
வசீம் அக்ரம் படுகொலை விவகாரம் DGP உள்ளிட்டோருடன் சந்திப்பு.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..
வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக சகோதரர் வசீம் அக்ரம் வழக்கு தொடர்பாக இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் இன்று DGP அலுவலகம் சென்றனர். காவல் துறை இயக்குனர் திரு.சைலந்திர பாபு அவர்களிடம் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்தும், வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்தும் மனு ஒன்றை பொதுச் செயலாளர் அவர்கள் கையளித்தார். பிறகு உளவுத் துறை ADGP திரு.டேவிட்சன் ஆசிர்வாதம், உளவுத் துறை IG திரு.ஈஸ்வர மூர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேசினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 13.09.2021
திருச்சுழியில் மஜக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்டம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர்,அவர்கள் தலைமையில் திருச்சுழியில் நடைபெற்றது. முகாமை திருச்சுழி பள்ளிவாசல் தலைவர் சிக்கந்தர், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்தான பாண்டியன், ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேச ராஜா, வீர சோழன் நகர செயலாளர் அப்துல் மஜீத், ஸ்ரீ வில்லி புத்தூர் நகரச் செயலாளர் ஷாஜகான்,அருப்புக்கோட்டை நகர பொறுப்பாளர் மன்சூர், ஸ்ரீவில்லி புத்தூர் கூமாபட்டி நகர பொறுப்பாளர் சாதிக் அலி,ராஜ பாளையம் நகர செயலாளர் சம்சுதீன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 12.09.2021