நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு.! மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்தனர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்கு நேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது,

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வனப் பகுதியில் உள்ள இந்திய புகழ் பெற்ற முன்டந்துறை புலிகள் சரணாலயம் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் புலிகள் இனம் அழிந்து வருகின்றது, மேலும் உலகின் அரியவகை சிங்கவால் குரங்கு இனமும் அழிந்து வருவதையும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் நெல்லையில் அமைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்ற பட்டதால் அப் பல்கலைக்கழகத்தை அரிய வகை மூலிகைகள் அடங்கிய நாங்கு நேரி தொகுதிக் குட்பட்ட மலையடிவாரத்தில் அமைக்க வேண்டும், அப்போதுதான் அங்கு பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், அமையும் எனவும் மேலும் பல மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொலை நோக்கு பார்வையோடு தாங்கள் அளித்த இந்த கோரிக்கைகளை நிச்சயமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கையாக சட்டமன்றத்தில் வைத்து தமிழக அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்வேன் என்று நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால், மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி, மாவட்ட துணை செயலாளர் இரா.முத்துக்குமார் , மாவட்ட அணி நிர்வாகிகள் N.அப்பாஸ், S.S.U.மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
16-09-2021