செப்:21., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மஜக மாவட்ட துணைச் செயலாளர் N ஜஹாங்கிர் பாஷா தலைமையில் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர் தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #லப்பைகுடிகாடு_நகரம் #பெரம்பலூர்_மாவட்டம் 20-09-2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
பொள்ளாச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு..!!
செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஆனைமலை ஒன்றியம், அம்பராம் பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆனைமலை ஒன்றிய மஜக பொறுப்பாளர் M.அலாவுதீன் தலைமையில் அம்பராம்பாளையம் ஊராட்சி செயலாளர் மைதீன், துணை செயலாளர் மணிகண்டன், ஊராட்சி MJTS பொறுப்பாளர்கள் ஜாகிர் உசேன், சாந்து முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்„ #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #பொள்ளாச்சி_நகரம் #கோவை_மாவட்டம் 20-09-2021
திருவாரூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி! அமைச்சரிடம் மஜகவினர் கோரிக்கை மனு!
பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிரிவைத் தொடங்கி வைக்க வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அமைச்சருடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், அவர்கள் உடனிருந்தார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும், அவசர அறுவை சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக அறுவை சிகிச்சை மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராம மக்கள் வந்து செல்வதால் நவீன உபகரணங்களை இம்மருத்துவமனையில் அமைக்க வேண்டும், எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற துறைகளில் மருத்துவமனையில் 24, மணிநேரம் செயல்பாட்டில் இருக்குமாறு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், இம்மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது ஆகவே அரசு அந்த பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ மனையில் நீண்டகாலமாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நகர துணை செயலாளர்
பாளையில் படுகொலை! அப்துல்காதர் குடும்பத்தாருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆறுதல்.!
நெல்லை மாவட்டத்தில் கடந்த 15-09-2021 அன்று இரவு பாளையங்கோட்டையில் வைத்து இந்திய தேசிய லீக் கட்சி துணை பொதுச்செயலாளர் மக்தும் அவர்களின் மகன் அப்துல்காதர் படுகொலை செய்யப்பட்டார். இத்துயர சம்பவம் அறிந்து நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் அவர் இல்லத்திற்க்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அச்சமயத்தில் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் படுகொலை செய்யபட்ட இளைஞரின் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோரிடம் படுகொலை குறித்து விசாரித்து அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதில் சட்டபடியான அனைத்து நடவடிக்கைகளிலும் மஜகவினர் உங்களுக்கு துணை நிற்போம். எந்தநேரமும் எங்களது நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி, மனித உரிமை பாதுகாப்பு அணி முருகேசன், டில்லி சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 18-09-2021