பொள்ளாச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு..!!

செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக ஆனைமலை ஒன்றியம், அம்பராம் பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆனைமலை ஒன்றிய மஜக பொறுப்பாளர் M.அலாவுதீன் தலைமையில் அம்பராம்பாளையம் ஊராட்சி செயலாளர் மைதீன், துணை செயலாளர் மணிகண்டன், ஊராட்சி MJTS பொறுப்பாளர்கள் ஜாகிர் உசேன், சாந்து முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்„

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#பொள்ளாச்சி_நகரம்
#கோவை_மாவட்டம்
20-09-2021