பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி! அமைச்சரிடம் மஜகவினர் கோரிக்கை மனு!

பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிரிவைத் தொடங்கி வைக்க வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அமைச்சருடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், அவர்கள் உடனிருந்தார்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும், அவசர அறுவை சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக அறுவை சிகிச்சை மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராம மக்கள் வந்து செல்வதால் நவீன உபகரணங்களை இம்மருத்துவமனையில் அமைக்க வேண்டும், எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற துறைகளில் மருத்துவமனையில் 24, மணிநேரம் செயல்பாட்டில் இருக்குமாறு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், இம்மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது ஆகவே அரசு அந்த பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ மனையில் நீண்டகாலமாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நகர துணை செயலாளர் ச.அன்சார், மருத்துவ சேவை அணி செயலாளர் A.ஜான்ஸ்கான், நகர MJTS தலைவர் அசரப் அலி, நகர MJTS பொருளாளர் சிவக்குமார், வணிகர் சங்க துணை செயலாளர் ரஃபி, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாவட்டம்
19.09.2021