திண்டுக்கல்.செப்.03., இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் S.சஹாப் தீன், கர்நாடகா மாநில பெங்களூர் மாநகர செயலாளர் K.M.J.பாபு, பொருளாளர் K.M.J.சல்மான் இவர்கள் முன்னிலையில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்ளைகைகளை எடுத்து கூறிய பின்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் வேடசந்தூர் நகரத்தின் பொருப்பாளர்களாக S.இம்ரான், J.பிலால் முகமது, M.முஸ்தாக் ஆகிய மூவரும் நியமிக்கபட்டனர். இனி வரும் காலங்களில் சிறப்பாகவும், வீரியத்துடனும், சகோதரத்துடனும், கட்சியின் வளர்ச்சிக்கு பாடு படுவதாகவும், மேலும் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் உறுதிமொழி எடுத்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திண்டுக்கல்_மாவட்டம் 03_09_2017
புதிய கிளை
கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலஹங்காவில் மஜக கிளை உதயம்…
பெங்களூரு.ஆக.20, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகருக்குட்பட்ட எலஹங்கா பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதிய கிளை மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் இன்று துவங்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்கைகள், மஜக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சிறப்பான சட்டமன்ற பணிகள் குறித்தும் மற்றும் இனி வரும் காலங்களில் புதிய நிர்வாகிகள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்தும் மாநகர செயலாளர் விளக்கி சிற்றுரை நிகழ்த்தினார்கள். இதில் மஜக மாநகர பொருளாளர் K.M.J.சல்மான், துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல்ஹமீது , இளைஞர் அணி செயலாளர் S.சண்முகம் தேவர் ஆகியோருடன் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_ IT_WING #KARNATAKA 20-08-2017
மஜக மதுரை வடக்கு கருப்பாயூரணி பகுதி ஆலோசனை கூட்டம்…
மதுரை.ஆக.13., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட அலுவகத்தில் மாவட்ட செயலாளர் பி.எம் சேக் அகமது அப்துல்லா தலைமையில் மதுரை கருப்பாயூரணி பகுதி சார்ந்த மஜக நிர்வாகிகள் இடம் கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் E.N.K.ஷாஜஹான், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.அலாவுதீன், மாவட்ட பொருளாளர் N.ராஜா முஹம்மது முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாணவர் இந்தியா செயலாளர் E.N.K.ஜாபர், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் அப்பாஸ், பகுதி செயலாளர் அஸ்ரப் அலி, கிளை செயலாளர் அமானுல்லா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது... 1. கருப்பாயூரணி பகுதியில் மஜக ஒன்றிய அலுவலகம் விரைவில் திறப்பது எனவும், 2.சுற்று வட்டாரங்களில் அதிகமாக மஜக கொடி ஏற்றதால் எனவும், 3. ஒன்றியம் முழுதும் அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது எனவும், 4 கருப்பாயூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மஜக கிளை அமைப்பது என்றும் ஏக மனதாக முடிவு செய்யபட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மதுரை வடக்கு மாவட்டம். 13.08.17
நாகை தெற்கு இரட்டை மதகடி மஜக ஆலோசனை கூட்டம்..!
நாகை.ஆக.07., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம், கீவளுர் ஒன்றியம், இரட்டை மதகடியில் நேற்று (06/08/2017) மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரியாஸுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாலர் பரகத் அலி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அதில் இரட்டை மதகடி சகோதரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்யப்பட்டது. பிறகு புதிதாக வந்திருந்த சகோதரர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். புதிய பொறுப்புக்குழு போடப்பட்டது. அதன் விபரம் வருமாறு. கிளை பொறுப்பாளர்களாக N.S.தாவூது அவர்களையும், H.M.சாகுல் ஹமீது அவர்களையும் நியமிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இனி வரும் காலங்களில் தீவிரமாக கிளை உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் ஒரு மாதத்திற்க்குள் கிளை பொதுக்குழு கூட்டம் கூட்டி நிர்வாகிகளை தேர்வு செய்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING நாகை தெற்கு மாவட்டம் 06.08.17
காஞ்சி வடக்கு மாவட்டம் முடிச்சூாில் மஜக கிளை உதயமானது…
காஞ்சி.ஜூலை.23., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முடிச்சூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை துவங்கப்பட்டது. மேலும் மாநில செயலாளர் N.A.தைமியா அவா்களின் மேற்பாா்வையில், மாவட்ட செயலாளர் ஜிந்தா மதாா் அவா்கள் ஆலோசனையின் படி, மாநில் செயற்குழு உறுப்பினா் மன்னிவாக்கம் யூசுப் அவா்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப் மற்றும் மாவட்ட துணை செயலாளா் ஜாகீா் உசேன் அவா்களின் முன்னிலையில் முடிச்சூா் லக்ஷ்மி நகாில் 20கும் மேற்பட்ட இளைஞா்கள் மஜக-வில் தங்களை இணைத்து கொண்டாா்கள். மன்னிவாக்கம் யூசுப் அவா்களும் மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப் ஆகியோர் கட்சியின் கோட்பாடுகளை பற்றி சிற்றுரையாற்றினா்கள். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING காஞ்சி வடக்கு மாவட்டம் 23.07.2017