பிப்ரவரி மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் பெய்த மழையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட மகிழி, திருப்பூண்டி மற்றும் வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட தலைஞாயிறு, விழுந்தமாவடி, புதுப்பள்ளி பகுதிகளில் மழையில் மூழ்கிய விளை நிலங்களை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டார்.
அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் மற்றும் மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் உடன் வருகை தந்தனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் மூழ்கி அழுகிய நிலையில் இருந்ததையும், முளை விட்டிருப்பதையும் விவசாயிகள் வேதனையுடன் காட்டினார்கள்.
பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு தலா 25 ஆயிரமும் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீடு வழங்கவும் மஜக சார்பில் பரிந்துரைப்பதாக அவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் ஆறுதல் கூறினார்.
இதில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர், மற்றும் மாவட்ட செயலாளர் கமல் ராம், ஒன்றிய செயலாளர் அமானுல்லாகான் ஆகியோர் உடன் வந்து பாதிப்புகளை விளக்கினார்கள்.
பிறகு பொதுச்செயலாளர் அவர்கள் அதன் தலைவர் திரு P.R .பாண்டியன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.
இதில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் திருப்பூண்டி சாகுல் ஹமீது, நாகை மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது, பால முரளி, மாவட்ட விவசாய அணி செயலளர் ஜெக்கிரிய்யா, மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் அஜிஸ், கிளை செயலாளர் ஹாஜா மெய்னுதீன், துணை செயலாளர் ஜியாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.