மாணவர் சமுதாயத்தை அறிவுத்திறன் சார்ந்த மாணவர்களாக உருவாக்குவதே மாணவர் இந்தியாவின் குறிக்கோளாகும் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களை கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான் நாம் செய்ய வேண்டிய செயலா? Facebook , What's App - ல் கருத்து சொல்வது மட்டும் தான் நமது சமூக பங்களிப்பா? நாளொரு மேனியும், பொழுதோடு வண்ணமுமாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை பாதுகாக்க நாம் என்ன செய்ய போகிறோம்? சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றவது இது தான் இளைஞர்களின் இன்றிமையாத பணியா? இவற்றுக்கெல்லாம் தீர்வு காண மாணவர் இந்தியா அன்போடு அழைக்கிறது. இரண்டு நாள் முழுநேர பயற்சி முகாம் 2017 மே 13,14 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் { ECR ரோடு } நடைபெற உள்ளது. மாணவர் இந்தியா நடத்தும் திறன் மேம்பாடு கோடை கால பயற்சி முகாமிற்கு சமுதாய தலைவர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறைச் சார்ந்த அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சாதனையாளர்கள், கலைத்துறையினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பயற்சி வழங்குவார்கள். கல்லூரி மாணவர்கள் மட்டும் பட்டதாரி மாணவர்கள் மட்டுமே அனுமதி. இம்முகாமில் பங்கேற்பவர்களின் பதிவு கட்டணம்
செய்திகள்
நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் நாகை MLA அவர்களுடன் சந்திப்பு!
நாகை.ஏப்.18., நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொண்ட MLA அவர்கள் மீனவர்களின் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 18.04.17
ஆளுநர் சந்திப்பில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்பு…
சென்னை.ஏப்.18., தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தில் மேதகு ஆளுநர் வித்யாசாகர்ராவ் மூலமாக பிரதமர் மோடியை வலியுறுத்தி தீர்மானங்களை அனுப்பி வைப்பது என முடிவெடுக்கபட்டது. அதன்படி இன்று சந்திப்பதற்கு ஆளுநர் மாளிகை அனுமதி வழங்கியிருந்தது, அதனை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் ஆளுநரை சந்தித்து இன்று (18.04.2017) காலை 11 மணியளவில் கோரிக்கை மனுவினை ஆளுநரிடம் அளித்தனர். தமிழக ஆளுநர் வித்யசாகர் ராவை விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.Com, காங்கிரஸ் கட்சி சார்பில் பவன்குமார், தமாகா சார்பில் கோவை தங்கம், விடியல் சேகர், விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவராஜசேகரன், ஜல்லிக்கட்டு மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் வேலு, காயத்திரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 17 பிரதிநிதிகள் சந்தித்து விவசாயிகளுக்கான கோரிக்கை மனுவை அளித்தார்கள். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை 18-04-2017
வடசென்னை பகுதியில் மஜகவின் கொடியேற்றம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி..!
சென்னை.ஏப்.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்டம் திரு.வி.க. நகர் பகுதி 75-வது வட்டம் (ஓட்டேரி கிளை) சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட செயலாளர் S.A. அஸிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருமங்கலம் J. ஷமிம் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு மனிதநேய சொந்தங்களுக்கு கழகத்தின் சார்பாக மஜக கிரிக்கெட் அணி பனியன்களை வழங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்விற்கு மாவட்ட துணை செயலாளர் அன்வர் முன்னிலை வகித்தார், வட்ட செயலாளர் செல்வம் மற்றும் பொருளாளர் ரசாக் ஆகியோர் வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வடசென்னை. 17.4.2017.
முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.3,80,000/- நிதி ஒதுக்கிய நாகை எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு!
நாகை. ஏப்.18., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடவும், பள்ளிக்கட்டிடங்களுக்கு டைல்ஸ் அமைத்திடவும் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்து எண்பதாயிரம் (3,80,000/-) நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி.MA., அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர், கிராமவாசிகள், மாணவர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நாகப்பட்டினம் 18.04.2017