மஜக பரங்கிப்பேட்டை ஒன்றியம் சார்பில் வாழ்வாதார நலத்திட்ட உதவிகள்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியம் சார்பில் ஊரங்கினால் சிரமத்திற்குள்ளாகும் குடும்பங்களை கண்டறிந்து பல்வேறு கட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பள்ளிப்படை, இந்திரா நகர் பகுதிகளை சேர்ந்த சுமார் 70 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மஜக ஒன்றிய செயலாளர் காஜா மைதீன் தலைமையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது ரபிக், இளைஞர் அணி செயலாளர் நைனா முஹம்மது, கொள்கை விளக்க அணிச் செயலாளர் முகமது இக்பால், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல்லா, MJTS செயலாளர் முஹம்மது பாஷா, மாணவர் இந்தியா பொருளாளர் தமீம், துணை செயலாளர் முகமது பைசல், நகர செயலாளர் செய்யது புஹாரி, பொருளாளர் சதாம் உசேன், MJTS தமிமுன் அன்சாரி, இளைஞரணி செயலாளர் ஹபிபுல்லா, லப்பை தெரு கிளை பொருளாளர் மைதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்தெற்குமாவட்டம்.