சென்னை.மே.05., நேற்று 04.05.2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி புளியந்தோப்பு 77வது கிளையில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்கள். உடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட துணை செயலாளர் ரவுப் ரஹீம், மாநில செயற்குழு உறுப்பினர் அபு தாஹிர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமிர் அப்பாஸ் ஆகிய மாநில,மாவட்ட நிர்வாகிகளும், பகுதி செயலாளர் T.M.யூசுப், து.செயலாளர் அப்துல் கலாம், A.Y.முஹம்மது ஜயுப், I.முஹம்மதுஅலி, S.குதுரத்துல்லா, K.பெரோஸ், A.முஹம்மது சாதிக், I.இம்ரான், சுல்த்தான் மொய்தீன் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, மத்திய சென்னை மாவட்டம். #MJK_IT_WING 04.05.2017
செய்திகள்
விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? பட்டமளிப்பு விழாவில் M.தமிமுன் அன்சாரி MLA உரை !
விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? மாணவர்கள் சிந்திக்க வேண்டும் ! பட்டமளிப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை ! நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற EGS பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 30 அன்று 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்துகொண்டார் . தொடர்ந்து 2 மணி நேரம் நின்றுகொண்டே 598 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார். மருத்துவ ஓய்வு காரணமாக ஒருமாதம் வரை நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அன்பு வேண்டுகோளை ஏற்று, நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவரது குரல் பலவீனமான இருந்தாலும், கருத்துகள் வீரியத்தோடு வெளிப்பட்டு, பலத்த கரகோஷங்களை பெற்ற வண்ணம் இருந்தது.அவரை பின்னணி இசையுடன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று முன்னுரை கொடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்தபோது மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர் . தனது உரையில் , கல்லூரி வாழ்க்கையை வசந்த காலம் என்று வர்ணித்தவர், கல்லூரி முடித்த பிறகு அந்த நாட்களை நினைத்தால் கண்ணீர் முட்டும் என்றார்.
இளையான்குடி நகர மஜக ஆலோசனை கூட்டம்!
சிவகங்கை.மே.02., இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர் செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் மாநில துனைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் மற்றும் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துனைச் செயலாளர்கள் ஜெயினுலாபுதீன், அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நேற்று 01-05-2017 நகர அலுவலகத்தில் நடைபெற்றது. கீழ்கன்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. நகரின் அடிப்படை தேவைகளுக்காக சமீபத்தில் மஜக சார்பில் நடைபெற்ற அறிவிப்பில்லா திடீர் சாலை மறியலின் போது அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிரைவேற்றும் வரை கவனமாக கண்காணிப்பது. நாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற காலதாமதமானால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திப்பது. 2. நகரின் 10 வார்டுகளிலும் மஜக கிளை நிர்வாகிகளை நியமிப்பது. 3. நிர்வாக செலவுகளான அலுவலக வாடகை, மின்சாரக் கட்டணம், இதர அலுவலக செலவுகளுக்காக பொதுமக்களை சந்தித்து நன்கொடைகள் பெறுவது. 4. கடந்த வருடங்களை போல எதிர்வரும் ரமலானின் கடைசி பத்தில் ஃபித்ரா (நோன்பு பெருநாள் தர்மம்) கடமையானவர்களிடம் வசூல் செய்து தேவையுடையோருக்கு பகிர்ந்தளிப்பது. 5. நகரின் முக்கிய அடிப்படை கோரிக்கைகளுக்காக மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, #மௌலா_நாசர் மற்றும் பொதுச்செயலாளர் மு.#தமிமுன்_அன்சாரி (நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினர்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட
E.G.S கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக M.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்பு!
நாகை. ஏப்.30., நாகப்பட்டினம் E.G.S பிள்ளை கலை, அறிவியல் கல்லூரியின் 2016-2017 க்கான பட்டமளிப்பு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த 30-04-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான M.தமிமுன் அன்சாரி MA.,MLA., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லுரியின் சேர்மன் ஜோதிமணி ஜி.எஸ்.பிள்ளை, செயலாளர் ஸ்ரீ.பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் டாக்டர் நட்ராஜ் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கெடுத்தனர். கல்லூரி நிர்வாகமும், பேராசிரயர்களும், மாணவ மாணவிகளும் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருந்ததால் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்து சிறப்பித்துதந்தது அணைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகை மாவட்டம் 30.04.2017
பி.ஆர்.பாண்டியன் அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!
மன்னார்குடி.ஏப்.29., விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அய்யா பி.ஆர் பாண்டியன் அவர்களை கடந்த 229.04.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். சில தினங்களுக்கு முன் நடந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டிய காவல்துறையின் அடாவடி போக்குகள் குறித்தும் விசாரித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும், ஐக்கிய அரபு அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்களும், மத்திய சென்னை மூஸா அவர்களும் உடன் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் 29-04-2017