வேலூர்.ஜூலை.24., இன்று காலை 10 மணியளவில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிரந்தர வீட்டு மனை பட்டா விரைந்து வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாவட்ட அமைப்புக்குழு தலைவர் முகம்மது ஜாபர் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மஜக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபீக் ரப்பணி, நுருல்லாஹ், முகம்மது யாசின், ஆகிய நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ்நாடு ஆதி ஆந்திரா மகா சபை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, வேலூர் கிழக்கு மாவட்டம். #MJK_IT_WING 24.07.2017
செய்திகள்
காஞ்சி வடக்கு மாவட்டம் முடிச்சூாில் மஜக கிளை உதயமானது…
காஞ்சி.ஜூலை.23., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முடிச்சூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை துவங்கப்பட்டது. மேலும் மாநில செயலாளர் N.A.தைமியா அவா்களின் மேற்பாா்வையில், மாவட்ட செயலாளர் ஜிந்தா மதாா் அவா்கள் ஆலோசனையின் படி, மாநில் செயற்குழு உறுப்பினா் மன்னிவாக்கம் யூசுப் அவா்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப் மற்றும் மாவட்ட துணை செயலாளா் ஜாகீா் உசேன் அவா்களின் முன்னிலையில் முடிச்சூா் லக்ஷ்மி நகாில் 20கும் மேற்பட்ட இளைஞா்கள் மஜக-வில் தங்களை இணைத்து கொண்டாா்கள். மன்னிவாக்கம் யூசுப் அவா்களும் மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப் ஆகியோர் கட்சியின் கோட்பாடுகளை பற்றி சிற்றுரையாற்றினா்கள். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING காஞ்சி வடக்கு மாவட்டம் 23.07.2017
மஜக திருவள்ளூர் (கி) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
சென்னை.ஜூலை.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த (22.07.17) அன்று திருவொற்றியூரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உடனடியாக கிளைகளை கட்டமைப்பது எனவும், கிளைகள் உள்ள அனைத்து இடங்களிலும் மஜக கொடி மற்றும் பெயர் பலகை திறப்பது எனவும், விரைவில் மாவட்டத்திற்க்கு உட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் S.M.நாசர், மாவட்ட பொருளாளர் L.ஜாபர் சாதிக், மாவட்ட துணை செயலாளர் A.கரிமுல்லா, மாவட்ட துணை செயலாளர் IKP A.S.தாரிக் முகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING திருவள்ளுவர் (கி) மாவட்டம். 22.07.2017.
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.3.39இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…
நாகை.ஜூலை.23., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.3.39 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நாகை ஊராட்சி ஒன்றியம் பொரவாச்சேரி உராட்சிக்கு உட்பட்ட புதுதெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2016-17-ல் இருந்து ரூபாய் 3.39 லட்சம் மதிப்பீடு கொண்ட சாலை அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 23/07/2017
அய்யம்பேட்டை தீ விபத்து! மஜக தலைவர்கள் பார்வையிட்டனர்!
தஞ்சை.ஜூலை.22., தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரா பள்ளியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 57 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. நேற்று அப்பகுதியை பார்வையிட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MடA அவர்கள், அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி வருகை தந்தார். அவருடன் மாநில செயலாைர்கள் நாச்சிகுளம் தாஜூதீன், ராசுதீன், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) செயலாளர் யூசுப் ராஜா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை.முபாரக், கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோரும் வருகை தந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று எரிந்த வீடுகளை பார்வையிட்ட பிறகு, மண்டபத்தில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். அங்கு ஜமாத்தினரும், அதிகாரிகளும் வரவேற்று நிலைமைகளை விளக்கினர். இது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்வதாகவும், உரிய இழப்பிடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவதாகவும் பொதுச் செயலாளர் அவர்கள் கூறினார். தகவல்; மஜக தகவல் தொழில் நுட்பஅணி #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம். 22.07.17