
சென்னை.ஜூலை.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த (22.07.17) அன்று திருவொற்றியூரில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உடனடியாக கிளைகளை கட்டமைப்பது எனவும், கிளைகள் உள்ள அனைத்து இடங்களிலும்
மஜக கொடி மற்றும் பெயர் பலகை திறப்பது எனவும், விரைவில் மாவட்டத்திற்க்கு உட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் S.M.நாசர், மாவட்ட பொருளாளர் L.ஜாபர் சாதிக், மாவட்ட துணை செயலாளர் A.கரிமுல்லா, மாவட்ட துணை செயலாளர் IKP A.S.தாரிக் முகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
திருவள்ளுவர் (கி) மாவட்டம்.
22.07.2017.