மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், சேப்பாக்கம் பகுதி சார்பில் திருவல்லிக்கேணி பிரதான சாலை பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
பகுதி செயலாளர் S.தஜூதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை, மாநில துணை செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான அஸாருதீன் மற்றும் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பகுதி பொருளாளர் எஸ்.முகமது அலி, பகுதி துணை செயலாளர் சாதிக் பாஷா, திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் சலீம், IKP மாவட்ட செயலாளர் லத்தீப், IKP மாவட்ட பொருளாளர் ரஃபி, துபாய் காஜா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.