மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுடைய அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக கடலூர் வடக்கு மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக தங்களது வீடுகள் மற்றும் நிலங்களை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீர்வு காண வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கியது.
நிகழ்ச்சியை போராட்டக் குழுவின் சார்பில் வழக்கறிஞர் செல்வநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.
மஜக மாநிலத் துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு படிவத்தில் கையொப்பமிட்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
சுமார் 1லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று அரசிற்கு அனுப்பும் முயற்சியில் மஜக வினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மன்சூர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி, இளைஞரணி மாவட்ட செயலாளர் மன்சூர், நகரச் செயலாளர் ஆதம் சேட், நகர இளைஞரணி செயலாளர் சதாம், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.