You are here

மஜக சிறப்பு நிர்வாக குழு கூட்டம்!

image

image

image

தஞ்சை.ஜூலை.23., நேற்று தஞ்சை மாவட்டம் மருதங்குடி ஊராட்சி ருத்ரா ரிசார்ட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முதலில் சரியாக காலை 10மணியளவில் தலைமை நிர்வாக குழு கூடியது.

கூட்டம் பொருளாளர் SS. ஹாரூன் ரசீது, அவைத்தலைவர் நாசர் உமரி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு பாரூக், கோவை சுல்தான், மாநில செயலாளர் தைமிய்யா ஆகியோர் தவிர்க்க முடியாத சொந்த காரணங்களால் வர இயலாத சூழ்நிலையை தெரிவித்து அனுமதி பெற்றிருந்தனர்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதின் உலவி, துணைப் பொதுச் செயலாளர்கள் ராவுத்தர்ஷா, மன்னை செல்லசாமி, மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சாதிக் பாட்ஷா, ராசுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சியின் வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை போன்ற பல் வேறு முக்கிய முடிவுகளை எடுத்தது நிர்வாக குழு.

எதிர் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி மதுரையில் தலைமை செயற்குழு நடத்துவது என்றும், கட்சியின் கட்டமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கில் மாநில துணை செயலாளர்களாக ஷமீம் அஹமது (தற்போதைய இளைஞர் அணி செயலாளர்), ஈரோடு பாபு (முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் வேலூர் வஸீம் (தற்போதைய மேற்கு மாவட்ட செயலாளர்) மூவரையும் நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் இதுவரை பொதுச் செயலாளர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளை,  நூலாகத் தொகுத்து சென்னையில்  பிரமுகர்கள், முக்கியஸ்தர்களை அழைத்து அவர்கள் முன் செப்டம்பர் மாதத்தில்  வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் சரியாக 12மணியளவில் சிறப்பு நிர்வாகக் குழு துவங்கியது. இதில் மாநில துணை செயலாளர்கள் மற்றும் மாநில அணிச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

கட்சியின் வளர்ச்சி குறித்த தகவல்களை, இனி செய்யவேண்டிய பணிகளை விரிவாக மாநில துணை செயலாளர்களும், மாநில அணி செயலாளர்களும் எடுத்து கூறினார்கள்.

பல்வேறு கேள்விகளுக்கு பொதுச் செயலாளர் விரிவான விளக்கமளித்தார்.

மாவட்டங்கள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பொறுப்புகள் தலைமை நிர்வாகிகளுக்கு  வழங்கப்பட்டது.

வரும் 6 மாத கால கட்சியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை பொதுச் செயலாளர் வழங்கினார். சரியாக 3மணிக்கு சிறப்பு நிர்வாக குழு நிறைவு பெற்றது.

வரும் ஆகஸ்ட் 1 தொடங்கி அக்டோபர் 31 வரை மூன்று மாத காலங்கள் மஜக வின் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனை பொதுச் செயலாளர், பொருளாலர், தலைமை ஒருங்கிணைப்பாளர், அவைத் தலைவர், இணைப் பொதுச் செயலாளர் ஆகிய ஐவர் அடங்கிய குழு வழி நடத்தும் என்றும், இம் மூன்று மாதங்களில் உறுப்பினர் சேர்ப்பும் தொடர்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் அன்பான உபசரிப்பு என அனைத்தையும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது பாராட்டத்தக்கது.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
தலைமையகம், சென்னை.
22.07.2017

Top