தூத்துக்குடி. ஆக.18., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் கேரள மக்களுக்காக காயல் நகர் வீதி, வீதியாக நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.
மாலை 4மணிக்கு தொடங்கி இரவு 9மணி வரை காயல்பட்டினத்தில் பெரும்பாலான தெருக்களில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது .
இதில் அணைத்து மக்களும் தானாக முன்வந்து பெறும் அளவில் தங்களது நிவாரண நிதிகளை வழங்கினர். இதில் ஏதிர்பாரத விதமாக ஒரு வீட்டில் தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த உண்டியலை நிவாரண நிதியாக வழங்கினர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல்ஹமீத் அவர்களின் தலைமையில் நகர பொருளாளர் மீரான், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாகிப், நகர துணை செயலாளர் ஜிப்ரி, நகர நிர்வாகிகள் அப்துல்ரகுமான், சிக்கந்தர்பாஷா, முன்னாள் நகர துணைசெயலாளர் ஜியாவுதீன், மற்றும் மனிதநேய சொந்தங்கள் நிதி சேகரிப்பில் கலந்துகொன்டனர்.
முதற்கட்டமாக ₹25,300 ரூபாய் வசூலானது.
இறைவன் நாடினால் நாளையும் தொடரும்.
கேரளா மக்களுக்காக வாரி வளங்கிய சொந்தங்களுக்கு இறைவன் நன்மைகளை வாரி வழங்குவானாக.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்