மதுரை.ஆக.18, மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் உறவுகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் ஒத்தக்கடை கிளையின் சார்பாக வெள்ள நிவாரண நிதி சேகரிப்பு இன்று நடைபெற்றது.
இதில் கிளைச்செயலாளர் பீர் முகம்மது தலைமையில்
இன்று மாலை தொடங்கி இரவுவரை கேரள மக்களுக்காக ஒத்தக்கடை பிரதான சாலை, மாட்டுத்தாவணி மத்திய பேருந்து நிலையம், ஆம்னி பேருந்துநிலையம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சாலையோர வியபாரிகளிடம் வெள்ளபாதிப்பு நிலைய எடுத்துக்கூறி நிவாரண நிதி திரட்டப்பட்டது.
எதிர்பார்த்ததை விட பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு நிவாரண பணிகளுக்கு வாழ்த்துக்கள் கூறிஆர்வமாக நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்தனர்.
இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார், கிளை நிர்வாகிகள்
சக்கரை, கபிலாஷ், பூமிநாதன் மற்றும் மனிதநேய சொந்தங்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம்
18-08-18