பத்தமடையில் விளையாட்டு போட்டிகள்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பரிசுகள் வழங்கல்!

ஆகஸ்ட்.20., நெல்லை மாவட்டம் பத்தமடையில் NRK டெலிவரி என்ற விளையாட்டு கழகம் சார்பில் கைபந்து போட்டி நடைபெற்றது.

அதன் பரிசளிப்பு விழா இன்று சிலம்பாட்டத்துடன் நடைபெற்றது.

இதில் அவ்வூரை சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் கடும் வெயிலில் தங்கள் வீர தீர சாகசங்களை அரங்கேற்றினர்.

கடும் மதிய வெயிலில் கூடி நின்ற பொது மக்கள் ஆராவாரம் செய்தனர்.

நிறைவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் போட்டியில் வென்றவர்களுக்கும், தனி சாதனையாளர்களுக்கும் பரிசு கோப்பைகளையும், கேடயங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஜமாத் தலைவர் T.M. மலுக்காம் அலி, மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், மாவட்ட செயலாளர் நெல்லை. நிஜாம், மாவட்ட அணி நிர்வாகிகள் பத்தமடை கனி, முருகேசன், ஒன்றிய நிர்வாகிகள் கோதர், அசன் கனி, பத்தமடை பேருர் செயலாளர் பீர் முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்
20.08.2021