வேலூர்.ஜூலை.24., இன்று காலை 10 மணியளவில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிரந்தர வீட்டு மனை பட்டா விரைந்து வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாவட்ட அமைப்புக்குழு தலைவர் முகம்மது ஜாபர் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் மஜக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபீக் ரப்பணி, நுருல்லாஹ், முகம்மது யாசின், ஆகிய நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ்நாடு ஆதி ஆந்திரா மகா சபை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
வேலூர் கிழக்கு மாவட்டம்.
#MJK_IT_WING
24.07.2017