கடலூர்.ஜனவரி.5..,
இன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன மாநாடு நடைப்பெற்றது.
இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார்.
இன்று டெல்லியில் JNU பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்தார்.
நாடெங்கிலும் நடைபெறும் போராட்டங்கள், நாள் தோறும் வீரியம் பெறுவதாக கூறியவர், அரசப் படைகளாலும், அடக்கு முறைகளாலும் இவற்றை ஒடுக்க முடியாது என்றார்.
மக்கள் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்றவர், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஐ.நா.வின் மேற்பார்வையில் இது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.
நீதி மறுக்கப்பட்டால் இப்பிரச்சனையை எங்கள் இந்து சமுதாய அறிவுஜீவிகள் ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்து செல்வார்கள் என்றும் எச்சரித்தார்.
இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பிரம்மாண்ட மக்கள் திரள் கூடி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்குடி, சிதம்பரம் தொகுதி மக்கள் மட்டுமே இணைந்து இவ்வளவு பெரிய எழுச்சியை திரட்டி உள்ளனர்.
ஜனநாயக சக்திகள், முற்போக்கு கட்சிகள், சமூக நீதி இயக்கங்கள் இணைந்து இம் மாநாட்டை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப=அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
05-01-2020
https://m.facebook.com/story.php?story_fbid=2199461026820327&id=700424783390633