மஜக இல்ல மண விழா

விருது நகரில் நடைபெற்ற மண விழாவில் மஜக பொதுச் செயலாளர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து!த்

ஜனவரி 5,

விருதுநகர் மாவட்ட மஜக செயலாளர் கண்மணி காதர் அவர்களின் மகன் முகம்மது சாகுல் ஹமீது அவர்களுக்கும் மணமகள் நாதிரா பர்வீன் அவர்களுக்கும் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமையில் மதுரையில் நடைப்பெற்றது.

இதில் கட்சியின் பொருளாளர் ஹாரூன் ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் , துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, மாநிலச் செயலாளர் நாச்சிக்குனம். தாஜ்தீன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

சிறப்பு விருந்தினராக நேதாஜி சேனாவின் தலைவர் டாக்டர் மகாராஜன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அவர் பேசும் போது, இன்றைய அரசியல் சமூக நிலையை தொட்டு பேசினார்.

மத்திய அரசின் கறுப்பு சட்டங்களை எதிர்த்து பேசியவர், பசும்பொன் தேவர் ஐயா அன்று சொன்னது போல் நாங்கள் என்றும் உங்களுக்கு துணை நிற்போம் என்றும், இறைவன் அருளால் சோதனைகளை முறியடிப்போம் என்றார்.

அடுத்து பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் இச்சட்டங்களை அமல்படுத்த முனைந்தால், மதுரை தேவர் சிலை அருகில் திரண்டு டாக்டர் மகாராஜன், அவர்கள் தலைமையில் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவிப்போம் என்றதும் பலத்த கைத்தட்டல் எழுந்தது.

நிகழ்ச்சியை மாணவர் இந்தியாவின் பிரசாந்த், அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், காயல் சாகுல், கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் சாந்த் முகம்மது, தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் கபீர், மதுரை மாவட்ட பொருளாளர் சசி, விருதுநகர் மாவட்ட பொருளாளர் பாதுஷா,மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட மனிதநேய சொந்தங்கள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#விருதுநகர்_மாவட்டம்
05.01.2010

https://m.facebook.com/story.php?story_fbid=2199151113517985&id=700424783390633