
நாகை. ஜூலை.25., நேற்று மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனோடு மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் சந்தித்து பேசினார்.
தன் தந்தை மறைவை அடுத்து சிறையிலிருந்து பிணையில் வந்துள்ள பேராசிரியரை, மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவுறுத்தலில் பேரில் நாகை வடக்கு மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறியதுடன் தற்போதைய சூழலை பற்றி அறிந்துகொண்டனர்.
பேராசிரியர் விடுதலை சம்மதமாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ம.ஜ.க பொதுச் செயலாளர் குரல் கொடுத்ததையும், கூடியவிரைவில் விடுதலை அடைய வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டு விடைப்பெற்றனர்.
அப்போது பேசிய பேராசிரியர் ஜெயராமன் “எனக்காக சட்டமன்றத்தில் பேசிவரும் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி M.L.A. அவர்களை கேட்டதாக சொல்ல சொன்னதுடன் துடிப்பான இளைஞர்கள் தான் எதையும் சாதிக்க முடியும் என்றும்: அந்தந்த பகுதியில் மக்கள் போராடி வெற்றிபெற வேண்டுமென்றும் சொன்னார்.
தகவல் ;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
நாகை வடக்கு
24_07_17