
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்ககோரி, குடியரசு தலைவருக்கு மாணவர் இந்தியா சார்பில் உருவாக்கப்பட்ட மாதிரி மின்னஞ்சல்.
தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை தகர்க்கும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற மாணவர் இந்தியா முன்னெடுத்துள்ள குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் முயற்சிக்கு அனைத்து மாவட்டங்கள் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி வாயில்களில் துண்டறிக்கை, போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் மூலம் மின்னஞ்சல் அனுப்பும் முயற்சியை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்;
ஊடக பிரிவு
மாணவர் இந்தியா
தலைமையகம்,
சென்னை.
25.07.2017