You are here

நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 24ஆம் ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சிகள்…. நாகை MLA பங்கேற்ப்பு!

image

image

image

ஜன.28., நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 24 வது ஆண்டு விளையாட்டு நாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் நாகை தொகுதி  சட்டமன்ற உறுப்பினன்
M. தமிமுன் அன்சாரி M.A., MLA., அவர்கள் பங்கேற்று, தேசிய கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளளரும்,
அமீரக தொழிலதிபருமான திரு.ஷேக் தாவூது மரைக்காயர்,
DSP திரு. புகழேந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி  திரு. சிவா,
பள்ளி நிறுவனரும், தொழிலதிபருமான M.S.J. அப்துல் ஹமீது மரைக்காயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மாநில அளவில் பல போட்டிகளில் தொடர்ந்து வென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
28.01.17

Top