சென்னை.ஜூலை.26., சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் மமக மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அஸ்லம் பாஷா அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன்அன்சாரி MLA அவர்களும், மாநில செயலாளர் சாதிக் பாட்சா மற்றும் மாநில துணைச்செயலாளர் திருமங்கலம் ஜெ.ஷமீம் அஹ்மத் உள்ளிட்ட கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறினர். பொதுச்செயலாளரின் ஊடக நேர்காணல் பதில்கள் மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் இருப்பதாக உற்சாகம் ததும்ப பேசியவர், பொதுச்செயலாளரின் உடல்நலத்திலும் கவனம் எடுக்க வேண்டும் என கவலை பொங்க தனது விருப்பத்தையும் தெரிவித்தார், மேலும் இறைவன் அருளாலும், பல்வேறு சகோதரர்களின் பிராத்தனை உதவியுடன் தற்பொழுது விரைந்து குணம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING சென்னை. 26.07.2017
செய்திகள்
வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப்படுத்த முடியாது! மஜக அறிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) வந்தே மாதரம் பாடலை கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. "தாய்மண்ணை வணங்குவோம்" என்றும் "துர்காதேவியை வணங்குவோம்" என்றும் பொருள்படும் வார்த்தைகளை கொண்ட, அப்பாடல் முஸ்லிம்கள் பின்பற்றும் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்ற "ஓரிறை கொள்கை வழிபாட்டு" முறைக்கு எதிரானதாகும். மேலும், கடவுள் மற்றும் மத மறுப்பு கொள்கை கொண்டவர்களுக்கும் இப்பாடல் எதிராக உள்ளது. இப்பாடலை சுதந்திரப் போராட்ட களத்தில், Rss ஆதரவாளர்கள் முன்னெடுத்தப் போது, அதை முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள். அதை காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், நேரு உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர். பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் இப்பாடலை இயற்றினார். இவர் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிராக அக்காலத்தில் பல நூல்களை இயற்றியவர். எனவே தான் தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும், போற்றும் வகையில் ரவிந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜன கன மண கன..." பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்கள். இன்று அனைவரும் அதை மனமுவந்து போற்றிப் பாடுகிறோம். அது போல ராணுவத்தில் பாடப்படும் "சாரே ஜகான் சே அச்சா" என்ற " உலகத்திலேயே சிறந்த
புழல் சிறையில் மே- 17 இயக்க ஒருகிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி உடன் மஜக தலைவர்கள் சந்திப்பு…
சென்னை.ஜூலை.25., தமிழக உரிமைக்காக போராடிய காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கபட்டுள்ள மே-17 இயக்க ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தமிழின உணர்வாளர்களை இன்று சென்னையிலுள்ள புழல் மத்திய சிறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, A.சாதிக் பாஷா மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அஹமது ஆகியோர் உடன் சென்றனர். இச்சந்திப்பின் போது சட்டமன்றத்தில் தங்களுக்காக குரல் கொடுத்ததற்கும், அதை பொது விவாதமாக மாற்றியதற்கும் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மஜக பொதுச்செயலாளரிடம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காக மஜக எடுத்துவரும் களப்பணிகள் மற்றும் செயல்பாடுகளையும் பாராட்டினார். அவர்களின் விடுதலைக்கு வாழ்த்துக்களை கூறி மஜக தலைவர்கள் புறப்பட்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING தலைமையகம், சென்னை. 25.07.2017
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி… மாணவர் இந்தியா சார்பில் குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல்!
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்ககோரி, குடியரசு தலைவருக்கு மாணவர் இந்தியா சார்பில் உருவாக்கப்பட்ட மாதிரி மின்னஞ்சல். தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை தகர்க்கும் 'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெற மாணவர் இந்தியா முன்னெடுத்துள்ள குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் முயற்சிக்கு அனைத்து மாவட்டங்கள் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி வாயில்களில் துண்டறிக்கை, போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் மூலம் மின்னஞ்சல் அனுப்பும் முயற்சியை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவல்; ஊடக பிரிவு மாணவர் இந்தியா தலைமையகம், சென்னை. 25.07.2017
மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனோடு மஜக நாகை வடக்கு மாவட்ட செயலாளர் சந்திப்பு !
நாகை. ஜூலை.25., நேற்று மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனோடு மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் சந்தித்து பேசினார். தன் தந்தை மறைவை அடுத்து சிறையிலிருந்து பிணையில் வந்துள்ள பேராசிரியரை, மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவுறுத்தலில் பேரில் நாகை வடக்கு மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறியதுடன் தற்போதைய சூழலை பற்றி அறிந்துகொண்டனர். பேராசிரியர் விடுதலை சம்மதமாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ம.ஜ.க பொதுச் செயலாளர் குரல் கொடுத்ததையும், கூடியவிரைவில் விடுதலை அடைய வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டு விடைப்பெற்றனர். அப்போது பேசிய பேராசிரியர் ஜெயராமன் "எனக்காக சட்டமன்றத்தில் பேசிவரும் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி M.L.A. அவர்களை கேட்டதாக சொல்ல சொன்னதுடன் துடிப்பான இளைஞர்கள் தான் எதையும் சாதிக்க முடியும் என்றும்: அந்தந்த பகுதியில் மக்கள் போராடி வெற்றிபெற வேண்டுமென்றும் சொன்னார். தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING நாகை வடக்கு 24_07_17